நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவி ஜீவிதா, 592 மதிப்பெண் பெற்று, மூன்று பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஸ்ருதி, 589 மதிப்பெண் பெற்று, இரண்டு பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்துள்ளார். மாணவி மனிஷா, 581 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்துள்ளார்.


கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவில் ஏராளமான மாணவ, மாணவியர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். தமிழ், ஆங்கில மொழி பாடங்களில், ஐந்து மாணவர்கள், 100க்கு, 98 மதிப்பெண் பெற்றனர். 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். இந்த மாணவர்களை, நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதேபோல், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன், பிரீத்தி கவுதமன் ஆகியோர் கல்வி ஊக்கத்தொகை அளித்து மாணவர்களை பாராட்டினர்.

Advertisement