மண் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொல்லப்பள்ளி அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரம் வி.ஏ.ஓ., விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஹட்கோ ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Advertisement