மாரியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடலுடன் நிறைவு

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி, தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தன. கடந்த புதன் கிழமை காலை தீமிதி விழா, மாலை தேர் திருவிழா நடந்தது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் ஆபரண உடையணிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஸ் ஸ்டாண்டில்
வாணவேடிக்கை நடத்தப்பட்டது.
தொடர்ந்து கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், கொடியிறக்கமும் நடந்தது. நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement