அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றுங்கள் கலெக்டர் அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: தாலுகா அளவில், வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடத்தி, வருவாய்த்துறை கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணபட்டவை குறித்தும், நிலுவை மனுக்களை விரைந்து தீர்வுகாண அறிவுறுத்த வேண்டும். பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் பணியை விரைந்து முடிக்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வருவாய்த் துறை சேவைகளை உடனுக்குடன் வழங்கவும், அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களிடம் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்ஷிநிகம், தனி டி.ஆர்.ஓ., ராஜ்குமார், ஆர்.டி.ஓ., முருகேசன் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement