ராஜஸ்தானில் சில இடங்களில் தொடரும் பதற்றம்; மீண்டும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு

1

ஜெய்சால்மர்: பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் அமலில் இருந்து வரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதியான ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஸ்ரீகங்கா நகர், பார்மரில் இன்று இரவும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடர்ந்தது. அப்போது, ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்கள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், அனைத்தையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.


தற்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இருப்பினும், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்து வருகிறது.


இந்த நிலையில், எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர்,ஸ்ரீகங்கா நகர், பார்மரில் இன்று இரவு 7.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிளாக் அவுட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றப்பகுதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்து வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது.



பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும், பிளாக் அவுட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது

Advertisement