சேர்க்கை உதவி மையம் அரசு கல்லுாரியில் துவக்கம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோயில் எம்.ஜி. ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் மீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி வரை, கல்லுாரி வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உதவி மையம் செயல்படும்.

பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய 5 பாட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள், சேர்க்கை உதவி மையம், மூலமாக கட்டணமில்லாமல் விண்ணப்பிக்க மதிப்பெண் பட்டியல், வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரலாம்.

மேலும், WWW.tngasa.in என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement