செல்லியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, ஈசன்கருணை கிராமத்தில், தேவி ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கோவில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த, கிராமவாசிகள் முடிவெடுத்தனர். 2023 ம் ஆண்டு, திருப்பணி துவங்கி, சில தினங்களுக்கு முன், நிறைவடைந்தது.
கடந்த 9ம் தேதி, மங்கள இசையுடன், கோ பூஜை, விக்னேஷ்வர பூஜைகளுடன், முதல் கால பூஜை துவங்கியது. இரண்டாம் கால பூஜை, நேற்று நடந்தது.
இன்று காலை 9:00 மணிக்கு, யாத்ராதான சங்கல்ப கலச புறப்பாடு, காலை 9:45 மணிக்கு, விமான கும்பாஷேகம், காலை 10:00 மணிக்கு, தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
மஹா அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, திருப்பாவை பாராயணமும், இரவு 9:00 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.