காஸ் சிலிண்டர் வெடித்து பழைய இரும்புகடை சேதம்

கம்பம் : கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் காமராசர் வீதியில் முருகன் மகன் ராஜ்குமாருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது.

கடைக்கு வரும் பழைய இரும்பு சாமான்களை உடைக்க காஸ் சிலிண்டர் பயன்படுத்தி உள்ளனர்.

நேற்று மாலை திடீரென கடையில் இருந்த சிலிண்டரில் காஸ் வெளியேறி தீப்பிடித்துள்ளது.

சுதாரித்த ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறினார்கள்.

சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தது.

தகவலின்பேரில் கம்பம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement