'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் மரியாதை செலுத்துவதற்காகவும் பேரணி என்று அறிவித்தார். அதில், அனைத்து கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று, அவர் அழைப்பு விடுக்கவில்லை.
தி.மு.க., தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதியில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால், பலர் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
தற்போது, நிலுவையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நான்கு வருடங்களாக நிறைவேற்றப்படாத வாக்குறுதியால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான், 2026ல் மக்களை சந்திக்க ஒரே வழி. தி.மு.க., கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணி தான். எஞ்சி இருக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியதும் மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி
-
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை திறப்பு; சிறப்புகள் ஏராளம்!
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!