கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு

1

கோவை: கோவையில் தாயை பிரிந்த நிலையில் தனியாக சுற்றிக் கொண்டிருந்த குட்டி யானையை, வனத்துறையினர் மீட்டு முதுமலை தெப்பக்காடு முகாமில் பராமரித்து வருகின்றனர்.


கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, எட்டிமடை வனப்பகுதியில், பிறந்து ஒரு மாதமான, ஆண் குட்டி யானை தாயை பிரிந்து தனியாக தவித்துக் கொண்டிருந்தது. வன ஊழியர்கள் அதனை மீட்டு, தாயை கண்டு பிடித்து சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது.


தொடர்ந்து, உயர் வன அதிகாரிகள் உத்தரவுப்படி, வனத்துறையினர் குட்டி யானையை, வாகன மூலம் அழைத்து வந்து, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைத்தனர். முதுமலை, கால்நடை டாக்டர் ராஜேஷ் அதனை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து தனி அறையில் வைத்து, இரண்டு ஊழியர்கள் நியமித்து பராமரித்து வருகின்றனர்.



'குட்டி யானை நல்ல நிலையில் உள்ளது. அதற்கு திரவ உணவு வழங்கப்படுகிறது.
யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது' என், வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement