போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

6

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.


கடந்த நான்கு நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.



போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது.


தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

Advertisement