நிர்வாகிகள் தேர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்தது.

தேர்தல் அதிகாரி கலையரசி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். நீதித்துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் மனோகரன், சிபு, பால்ராஜ், ராமகிருஷ்ணன், பிரகாஷ், பிரபாகரன், செந்தில் தேர்தல் பார்வையாளராக பணியாற்றி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

மாவட்ட குழு தலைவராக சுந்தர்ராஜ், செயலாளராக திருப்பதி, பொருளாளராக வெங்கடேசன், துணை தலைவர்களாக கண்ணன், முத்துராமன், ரபியுல்லா, இணை செயலாளர் ரகுபதிராஜ், ஹரி கிருஷ்ணன், கல்யாணி, மாநில செயற்குழு உறுப்பினர்களாக பூமிநாதன், மாசிலாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement