சேதமடைந்த ரோடு சீரமைப்பு

முதுகுளத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் கடலாடி விலக்கு ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சேதமடைந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.

முதுகுளத்துார் கடலாடி விலக்கு ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாகி வந்த நிலையில் ரோடும் சேதமடைந்தது. குண்டும் குழியுமாக இருப்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த ரோட்டில் ஜல்லிக்கற்கள் கொட்டி சமன் செய்தனர்.

---

Advertisement