அந்தரநாச்சியம்மன் பூச்சொரிதல் விழா

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் மணமேல்பட்டி காட்டில் எழுந்தருளியுள்ள அந்தரநாச்சியம்மனுக்கு அப்பகுதி கிராமத்தினர் பூத்தட்டு, பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
மணமேல்பட்டி காட்டுப்பகுதியில் அந்தரநாச்சி அம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரையில் பூச்சொரிதல் விழா நடைபெறும்.
நேற்று முன்தினம் பக்தர்கள் விநாயகர் கோயிலில் கரகம், பால்குடம், பூத்தட்டுக்களை எடுத்து வந்து வைத்தனர். தொடர்ந்து சாமியாடிகள் அழைப்பு நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக விருசுழியாறு, காட்டுப்பகுதி வழியாக அம்மன் கோயிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தொடர்ந்து பூக்களை அம்மனுக்கு சமர்ப்பித்தனர்.கரும்புத் தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அரிவாள் மீது ஏறி சாமியாட்டம் நடந்தது. கோயில் பூஜாரி கரகத்தை குளத்தில்மூழ்கி வழிபாட்டை நிறைவு செய்தார்.
மேலும்
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது