கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது

மாநில பட்டியலில் இருந்த கல்வி, கடந்த 1976ல், இந்திரா ஆட்சியில்தான் மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதை இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டுவர முடியவில்லை.
இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. 'நீட்' தேர்வை, அ.தி.மு.க.,வும் வேண்டாம் என்றுதான் சொல்கிறது. ஆனாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசு பள்ளி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதில், அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. தரம் உயர்த்தினால், மாணவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், தங்களை தகுதிபடுத்திக் கொள்வர்.
எதிர்காலத்தில் நீட் தேர்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவர். மத்திய அரசு கல்விக்கொள்கை வேண்டாம் எனக்கூறும், தி.மு.க., அரசு கடந்த, 4 ஆண்டுகளில், 252 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அனுமதியை வழங்கிவிட்டு, மத்திய அரசை குறை கூறக்கூடாது.
தம்பிதுரை
கொள்கை பரப்புச்செயலர்,
அ.தி.மு.க.,



மேலும்
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி
-
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை திறப்பு; சிறப்புகள் ஏராளம்!
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!