வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர் வறட்சியால் வேகமாக குறைந்து வருவதால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதியான இருதயபுரம், பெத்தார் தேவன் கோட்டை, நெடும்புலிக் கோட்டை, பிச்சனார் கோட்டை, புலி வீர தேவன் கோட்டை, பொன்னால கோட்டை, செட்டிய மடை, புல்லமடை, மேலமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.
பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. மேலும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாததால் பாசன மடைகள் மூலம் கோடை சாகுபடிக்கு கண்மாய் நீரை பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், தண்ணீர் வேகமாக குறைந்து வருவதாலும், மழையின்றி வறட்சி நிலவுவதாலும், கோடை நெல் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது