லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை திறப்பு; சிறப்புகள் ஏராளம்!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தை இன்று (மே 11) வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 100 ஏவுகணைகளை தயார் செய்ய முடியும்.
பிரம்மோஸ் ஏவுகணை என்பது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பு. இருநாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி இந்த ஏவுகணையை உற்பத்தி செய்கிறது. இந்த ஏவுகணைக்கு, இந்தியாவில் உள்ள பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மஸ்க்வா நதிகளின் பெயர்களை இணைத்து, பிரம்மோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனால் தான் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணையை உற்பத்தி செய்ய, ரூ.300 கோடியில், 1,600 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 100 ஏவுகணைகளை தயார் செய்ய முடியும்.
இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூ.300 கோடியில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளது. இது தன்னிறைவு பெற்ற பாதுகாப்பு உற்பத்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இதில் ஏவுகணை உற்பத்தி மட்டுமல்ல, சோதனை செய்யவும் முடியும். இது பாதுகாப்பு துறையின் தன்னிறைவு வளர்ச்சியை எடுத்துரைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலை அமைக்க 2021ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
முதல்வர் யோகி பேச்சு
லக்னோவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் சக்தியை நாம் பார்த்தோம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பாகிஸ்தான் மக்களிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்.
எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இப்போது போர்ச் செயலாகக் கருதப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பயங்கரவாதம் முற்றிலுமாக நசுக்கப்படும் வரை, பிரச்னை தீர்க்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் நாம் அனைவரும், முழு தேசமும் பிரதமர் மோடியின் தலைமையில் ஒரே குரலில் ஒன்றுபட்டு இந்தப் பிரசாரத்தை ஆதரிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகிற்கு தனது பலத்தை காட்டியது. பயங்கரவாத செயலுக்கு அதன் சொந்த மொழியில் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரம்மோஸ் ஏவுகணை சிறப்புகள் இதோ!
* இந்த அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை 290 முதல் 400 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது.
* இந்த ஏவுகணை அதிகபட்சமாக 650 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
* இதனை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும்.
* நம் ராணுவத்தின் முப்டைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது.
* நிலம், கடல் அல்லது ஆகாயத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால், இந்த ஏவுகணையை பயன்படுத்தி பலமுனை தாக்குதல் நடத்த முடியும்.






மேலும்
-
நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புடின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் உக்ரைன் அதிபர்
-
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகள்; பெயர், போட்டோ வெளியிட்டு இந்தியா அம்பலம்!
-
ஆப்ரிக்காவில் கனமழையால் 62 பேர் பலி; மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரம்
-
நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலம்
-
துாத்துக்குடியை சேர்ந்தவர் மிஸ் திருநங்கையாக தேர்வு