போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!

புதுடில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள், இந்தியாவை மட்டும் பாராட்டிய தலைவர்கள் விவரம் குறித்து ஒரு சிறப்பு அலசல்.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவிக்கத் தொடங்கினர். இதில், இந்தியாவுக்கு மட்டும் பாராட்டு தெரிவித்த தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு:
* காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்.
* முதல்வர் ஸ்டாலின்,
* கர்நாடகா முதல்வர் சித்தராமையா,
* காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
* முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம்
* மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
* மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
பாகிஸ்தான், இந்தியா ஆகிய இருநாடுகளையும் பாராட்டிய தலைவர்கள் பட்டியல்:
* காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
* முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்










