முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு

காரைக்குடி: காரைக்குடியில் வீட்டில் இருந்த பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி சந்தைப்பேட்டையில் சித்ரா,53, என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்றிரவு வீட்டில் இருந்த பொழுது அவரது மருமகள் மகஸ்வேரி இருக்கிறாரா? என்று கேட்டு விசாரித்து வீட்டுக்குள் வந்த இரு பெண்கள் சித்ரா முகத்தில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் காரைக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடிய இரண்டு பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும்
-
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகள்; பெயர், போட்டோ வெளியிட்டு இந்தியா அம்பலம்!
-
ஆப்ரிக்காவில் கனமழையால் 62 பேர் பலி; மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரம்
-
நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலம்
-
துாத்துக்குடியை சேர்ந்தவர் மிஸ் திருநங்கையாக தேர்வு
-
தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோம்: அன்புமணி