மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 13ம் தேதி துவங்கக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மே 13ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மே 14,15ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
இந்தியா- பாக்., பேச்சுவார்த்தை; முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; போலீஸ்காரர் 2 பேர் பலி
-
உலக அமைதிக்கு வழி வகுக்கும்: பிரதமர் மோடி உறுதி
-
பங்குச்சந்தையில் ஏற்றம்; 2,000 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது சென்செக்ஸ்
-
நாட்டின் பாதுகாப்புக்கு செயற்கைக்கோள் கண்காணிப்பு அவசியம்; இஸ்ரோ தலைவர் நாராயணன்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிவு; ஒரு சவரன் ரூ.71,040!