பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; போலீஸ்காரர் 2 பேர் பலி

7


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ்காரர் 2 பேர் கொல்லப்பட்டனர்.


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ்காரர் 2 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவர்.


மேலும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கால்நடை சந்தை அருகே இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Advertisement