இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி

சுமத்ரா: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.



அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாக இந்தோனேசியா இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடைசியாக சுலவெசி பகுதியில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது.


இந்த நிலையில், வடக்கு சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 89 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


இந்த நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் இந்தோனேசிய மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

Advertisement