சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில் மோதி, கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் மொபைல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்தனர். அப்போது ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் முகமது நபூல், சபீர் அகமது உயிரிழந்தது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மொபைல்போன் பேசிக்கொண்டே மாணவர்கள் தண்டவாளத்தைக் கடந்த போது உயிரிழந்த சம்பவம், தண்டவாளத்தை கடப்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
வாசகர் கருத்து (5)
Tiruchanur - New Castle,இந்தியா
12 மே,2025 - 15:02 Report Abuse

0
0
Reply
சிவம் - ,
12 மே,2025 - 14:13 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
12 மே,2025 - 14:10 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
12 மே,2025 - 13:22 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
12 மே,2025 - 12:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்
-
தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..
-
பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
-
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
-
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்
Advertisement
Advertisement