பாக். பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம்: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

7

சென்னை: பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.


@1brசென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதல், பயங்கரவாத முகாம்கள் அழிப்பு உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்டனர்.


அவர்களின் கேள்விகளை எதிர்கொண்ட ரஜினிகாந்த் கூறியதாவது; பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து அங்கிருக்கும் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.


இந்த போரை மிக வலிமையாக, திறமையாக, மிக வீரியத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள், முப்படை வீரர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.


இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.


முன்னதாக, பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement