வாட்ஸ் அப் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஆர்டர்; பெண் டாக்டர் கைது

ஹைதராபாத்: ஆந்திராவில் வாட்ஸ் அப் மூலம் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை ஆர்டர் செய்த பெண் டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டர்க பணியாற்றி வந்தவர் நம்ரதா, இவர் வாட்ஸ் அப் மூலம் மும்பையை சேர்ந்த போதைப்பொருள் சப்ளையர் வான்ஸ் தாக்கர் என்பவரை தொடர்பு கொண்டு போதைப் பொருளை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக, கடந்த மே 4ம் தேதி ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, போதைப்பொருளை நம்ரதாவிடம் கொடுக்க வான்ஸ் தாக்கர் தனது உதவியாளர் பாலகிருஷ்ணனை அனுப்பியுள்ளார். இதற்காக, ஒரு ஓட்டலின் பார்க்கிங்கில் போதைப்பொருளை வாங்குவதற்காக நம்ரதா காரில் அமர்ந்திருந்தார். அப்போது, இது குறித்து தகவல் அறிந்த ராயாதுர்கம் காவல்நிலை போலீசார், நம்ரதா மற்றும் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் ரூ.10,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நம்ரதா போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதும், சுமார் ரூ.70 லட்சம் வரை இதற்காக செலவு செய்திருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிவு; ஒரு சவரன் ரூ.71,040!
-
ரூ.22,500 கோடி செலவு: சேட்டிலைட் மூலம் பாக்., பயங்கரவாதிகளை கண்காணிக்க முடிவு
-
19 நாட்களுக்கு பிறகு...! நேற்றிரவு எல்லையில் அமைதியான சூழல்; இந்திய ராணுவம் தகவல்
-
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு; முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
-
580 நாட்களுக்குப் பிறகு... இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்கும் ஹமாஸ்
-
நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புடின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் உக்ரைன் அதிபர்