இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு!

29

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த மே 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான், ட்ரோன்களை வீசி தாக்கியது.



இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது.



இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, இன்று மாலை நடத்தப்பட்டது. இரு நாடுகளை சேர்ந்த டி.ஜி.எம்.ஓ., அதிகாரிகள் போன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

Advertisement