காசி யாத்திரை நிறைவு: கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம்;முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் காசி யாத்திரையின் நிறைவாக கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த தனது மனைவியின் ஆத்மா சாந்தியடைய காசி யாத்திரை செல்ல கடந்த 2ந்தேது ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடலில் புனித நீராடி கடலில் மண் எடுத்து, பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி, தீர்த்ங்களில் எடுத்து கொண்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள சங்கர மடத்தில் கோ பூஜை செய்து பின் காசி யாத்திரை புறப்பட்டார்.
காசி யாத்திரை நிறைவு செய்வதற்காக கங்கையில் இருந்து தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு வந்த ஓ பன்னீர்செல்வம் திருக்கோயில் வளாகத்தில் விஸ்வநாதர் சன்னதி எதிரே கங்கா பூஜை செய்து பின்னர் அந்த புனித நீரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்
பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி பின்புறம் உள்ள பதஞ்சலி முனிவர் புகைப்படம் முன் அமர்ந்து நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர் .
மேலும்
-
பஞ்சாப் எல்லையில் ஹெராயின், ட்ரோன்கள் மீட்பு; பாதுகாப்பு படை நடவடிக்கை
-
இந்தியாவுக்கு ஆதரவு; பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை அறிவிப்பு
-
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு
-
எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு
-
ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்
-
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு