கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி

கோழிக்கோடு; கேரளாவில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.



இதுபற்றிய விவரம் வருமாறு:


கோழிக்கோடு அருகே மூராடு என்ற பகுதியில் கார் ஒன்றும், டெம்போ டிராவலர் வேன் ஒன்றும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அவர்களின் உடல்கள் வடகரையில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன.


வேனில் இருந்தவர்களில் 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியானவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


அவர்கள் மாஹே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.


விபத்தில் சிக்கிய டெம்போ டிராவலர் கர்நாடக மாநில பதிவு எண் கொண்டதாகும்.

Advertisement