பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்...: கடற்படை எச்சரிக்கை

9


புதுடில்லி: ''பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், நாம் என்ன செய்வோம் என்பது அந்நாட்டிற்கு தெரியும்,'' என இந்திய கடற்படை எச்சரித்து உள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் இன்று (மே 11) பேட்டி அளித்தனர்.


அப்போது கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏன் பிரமோத் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்திய கடற்படையின் போர் குழுக்கள், தரை படை குழுக்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடற்படையின் படைகள் அனைத்தும், தயார் நிலையில் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டது. தாக்குதல் நடந்த 96 மணி நேரத்திற்குள் அரபிக்கடலில், பயிற்சியும் நடந்தது.


இதனால், பாகிஸ்தானின் கடற்படை மற்றும் வான்படைகள், பாதுகாப்பு நிலைப்பாட்டையே எடுக்க முடிந்தது. கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் நிலம், கடல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வகையில் நமது கடற்படை அரபிக்கடலின் வடக்குப்பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் , நாம் என்ன செய்வோம் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement