10 நாட்கள் நடைபெறும் 'ஆபரேஷன் சிந்தூர்' சாதனை திரங்கா யாத்திரை: பா.ஜ., திட்டம்

புதுடில்லி: ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் வெற்றியை முன்னிலைப்படுத்தும் வகையில் மே 13 முதல் மே 23 வரை தேசிய திரங்கா யாத்திரைக்கு பா,ஜ., ஏற்பாடு செய்துள்ளது.
ஆபரேஷன் சிந்துார் வெற்றி தொடர்பாக இன்று டில்லியில்,பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்துார் சாதனைகளை பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கும், நாடு முழுவதும் பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்ப்பதற்குமான உத்திகள் விவாதிக்கப்பட்டன.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மே 13 முதல் மே 23 வரை 10 நாட்கள் திரங்கா யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் 10 நாட்கள் திரங்கா யாத்திரை நடத்தப்படும். இந்த நிகழ்வுகளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலையும், நாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இந்த பிரசாரம் இருக்கும்.
இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.











மேலும்
-
ஆசிரியர்கள் மீது அதிக பணிச்சுமை: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
-
மக்கள் குறைதீர் கூட்டம் 355 மனுக்கள் ஏற்பு
-
புகார் பெட்டி குப்பையில் மருத்துவ கழிவால் சுகாதார சீர்கேடு
-
கோடைகால பயிற்சி நிறைவு விழா
-
செஞ்சியில் தி.மு.க., பொதுக்கூட்டம்
-
காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் காங்கிரசின் 'எக்ஸ்' பதிவு நீக்கம்