கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி

ஆமதாபாத்: குஜராத்தில் இன்று மாலை கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சந்திடா கிராமத்தில் இன்று மதியம் நடந்தது. துலேரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
துலேரா போலீஸ் அதிகாரி கூறியதாவது:இந்த விபத்து இன்று மதியம் 3 மணியளவில் நடந்தது. ஆமதாபாத்திலிருந்து பாவ்நகருக்கு சென்று கொண்டிருந்த கார் அதிவேகமாக சென்ற போது சந்தேடா கிராமம் அருகே எதிரே வந்த மற்றொரு காருடன் மோதியது. பாவ் நகர் சென்ற காரில் 6 பேர் பயணித்துள்ளனர். அதில் இரண்டு பெண்களும் பயணித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 3 சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் பலியானார்கள். விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement