புதிராக உள்ளது!

நம் ராணுவத்தை நேற்று முன்தினம் மாலை 3:35க்கு பாக்., தரப்பு அழைத்து போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது; மத்திய அரசு அதை ஏற்றது. இந்த அறிவிப்பை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மாலை 5:25க்கு வெளியிட்டார். ஆனால் மத்திய அரசு, டிரம்ப் பெயரை குறிப்பிடவில்லை. எல்லாம் புதிராக உள்ளது.
சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்
உலகமே பார்த்தது!
பஹல்காம் தாக்குதலுக்காக, பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு தந்த பதிலடியை உலகமே பார்த்தது. இந்த சூழலை பிரதமர் கையாண்ட விதத்திற்காக மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இந்தியா எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை உலகிற்கு அவர் காட்டியுள்ளார்.
தியா குமாரி, ராஜஸ்தான் துணை முதல்வர்,பா.ஜ.,
டிரம்புக்கு இது தெரியாதா?
காஷ்மீர் பிரச்னை 1,000 ஆண்டுகள் பழமையானது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இந்த பிரச்னை, கடந்த 1947 அக்., 22ல் காஷ்மீருக்குள் பாக்., ராணுவம் படையெடுத்த போது துவங்கியது. இந்த உண்மை டிரம்புக்கு தெரியாதா?
மணீஷ் திவாரி, லோக்சபா எம்.பி.காங்கிரஸ்

