காயலான் கடையாக மாறிய வேளாண் துறை கட்டடம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் சிறந்த நீராதாரமாக சின்ன கும் மற்றும் பெரியகுளம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

இந்நிலையில், சின்னகுளக்கரையில் கடந்த 1980களில் பயன்பாட்டில் இருந்து, தற்போது கைவிடப்பட்டுள்ள வேளாண் அலுவலக கட்டடம் ஒன்றுபாழடைந்து கிடக்கிறது.

இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டடத்தை கடந்து தான், ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

ஏற்கனவே சீரழிந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தில், பழுதடைந்த குப்பை வண்டிகள் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, குளக்கரை மற்றும் கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை வண்டிகளை அப்புறப்படுத்தவும், பாழடைந்துள்ள வேளாண் துறை கட்டடத்தை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement