வீடு கட்டாதவர்களின் இலவச பட்டா ரத்தாகிறது

திருப்பூர் : தமிழகத்தில், இலவச பட்டா பெற்றும் வீடு கட்டாதவர்களை கணக்கெடுத்து, பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


திருப்பூர் மாவட்டத்தில், இம்மாதம் மட்டும், திருப்பூர் தெற்கு தாலுகாவில், 44; காங்கேயம் தாலுகாவில், 60 இலவச வீட்டுமனை பட்டாக்கள் மீது ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளால் நிலம் எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா பெறுவோர், குறிப்பிட்ட ஆண்டுக்குள் அப்பகுதியில் குடியேற வேண்டும்.

தற்போது, தமிழ் நிலம் செயலியில், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளி விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பட்டா வழங்கிய இடத்துக்கு நேரடியாக சென்று, கள ஆய்வு நடத்தப்படுகிறது.



அரசு வழங்கிய நிலத்தில் வசிக்காதவர்களின் பட்டாக்கள் கண்டறியப்பட்டு, ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், புதிய பயனாளிகளுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement