ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி 5000 தலைப்புகளில் புத்தகங்கள்

ராஜபாளையம் :மதுரை மீனாட்சி புக் ஷாப், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் இணைந்து ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ், ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்கு உஒள்ளது.

இங்கு இலக்கியம், நாவல், சரித்திரம், ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம், இன்றுவரை சாகித்ய அகடமி விருது பெற்ற நாவல்கள், தன்னம்பிக்கை, அனைத்து போட்டி தேர்வுகள் பற்றிய புத்தகங்கள், யார் இந்த மோடி, பணம் சார் உளவியல், வேள்பாரி, பண வாசம் போன்ற அதிக தேடல் உள்ள புத்தகங்கள் உள்ளன.

எழுத்தாளர்கள் சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், இந்திரா சவுந்தர்ராஜன், வரலொட்டி ரெங்கசாமி, வெங்கடேசன், வேல ராமமூர்த்தி, யுகபாரதி உள்ளிட்ட எழுத்தாளர்கள படைப்புகள் இங்கு உள்ளன.

மே 15 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். இங்கு தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.

Advertisement