கோயிலில் அ.தி.மு.க., பூஜை

ஆண்டிபட்டி: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.

ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் தலைமை வகித்தனர்.

நகர் செயலாளர் அருண்மதி கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ராமர், ஜெ.,பேரவை மாநில இணை செயலாளர் ஜெயக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ் பங்கேற்றனர்.

பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement