தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது

காவேரிப்பட்டணம் : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து, 35; நகை வியாபாரி. தன்னிடம் உள்ள நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக, நேற்று முன்தினம் மனைவியுடன் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி சென்றார்.

ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது, பின்னால் வேகமாக இரு பைக்குகளில் வந்த நால்வர், அல்லிமுத்து ஸ்கூட்டர் மீது மோதினர். பையில் அவர் வைத்திருந்த, 9.5 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டது, கிருஷ்ணகிரி, கணபதி நகரை சேர்ந்த மதன், 21, கிட்டம்பட்டி சக்திவேல், 29, பாப்பாரப்பட்டி சந்தோஷ்குமார், 28, அவதானப்பட்டி ராஜ்குமார், 28, என, தெரிந்தது.

அனைவரும் தி.மு.க.,வில் உறுப்பினர்களாக உள்ளனர். ராஜ்குமார் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், நால்வரையும் கைது செய்தனர்.

Advertisement