குட்கா பறிமுதல் 

புதுச்சேரி: காலாப்பட்டு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கணபதி செட்டிக்குளம், மருத்துவமனை சாலையில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்பகுதியை சேர்ந்த ஜெயராஜ், 35; என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

ஜெயராஜ் மீது வழக்குப் பதிந்த போலீசார், கடையில் இருந்த ரூ.4,400 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement