இந்தியா தாக்குதலில் சேதமடைந்த பாக்., விமானப்படை தளங்கள்: புதிய படங்கள் வெளியானது

1

புதுடில்லி: இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தானின் விமானப் படை தளங்களை செயற்கைக்கோள் மூலம் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய ராணுவ நிலைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது குறி வைத்தது. ட்ரோன்களை ஏவி தாக்கியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் அத்தனை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை நொறுக்கியது.


இதனையடுத்து பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களை குறிவைத்து இந்திய தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பயந்து போன பாகிஸ்தான் உடனடியாக நமது நாட்டு ராணுவ டிஜிஎம்ஓ.,வை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியது. இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து பாகிஸ்தான் எந்த உண்மையான தகவலை வெளியிட மறுத்து வருகிறது. வெற்றிபெற்றதாக பொய் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், அந்நாட்டு விமான படை தளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள சுக்கூர், போலாரி, ஜகோபாபாத் நகரில் உள்ள விமானப் படை தளங்கள், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் இடையில் உள்ள நூர்கான் விமான படை தளம், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா விமானபடை தளங்கள் ஆகியன இந்தியாவின் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்கு பின்பும் எடுத்த புகைப்படங்களை மேக்சார் என்ற தனியார் செயற்கைக்கோள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் விமானப் படை தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் அதில் காட்டுகிறது.

Advertisement