ஆற்று பாலத்தில் குப்பை கொட்டுவதால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றுபாலம் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கோமுகி ஆற்று பாலம் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால்
கோமுகி ஆற்று பாலம் அருகே குப்பைகள் கொட்டுதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது
-
ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு
-
அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
-
நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ராணுவ பட்ஜெட் 12 ஆண்டில் 2.6 மடங்கு உயர்வு!
Advertisement
Advertisement