ஜல்லி கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா தலை-மையில், மத்திகிரி வருவாய் ஆய்வாளர் தருமன் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து, டி.வி.எஸ்., கம்பெனி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்-தனர்.


அப்போது அவ்வழியாக வந்த, நான்கு டிப்பர் லாரிகளில் மொத்தம், 10 யூனிட் ஜல்லியை, உரிய அனுமதி சீட்டு இல்-லாமல், நாகொண்டப்பள்ளியில் இருந்து, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. லாரிகளை பறி-முதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்
பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்-றனர்.

Advertisement