பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 4 இடங்களில் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான 'கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று 14 மற்றும் 16, 19 மற்றும் 21 தேதிகளில் நடக்கிறது. அதன்படி கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று 14ம் தேதி தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து 16ம் தேதி சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 19ம் தேதி திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, 21ம் தேதி உளுந்துார்பேட்டை சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்று உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க உள்ளது. எனவே, மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளைப் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
-
இன்று ( மே 14 )மின்தடை
-
தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் பாராட்டு; குறைதீர் கூட்டத்தில் பெருமிதம்
-
குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்
-
கவர்னர், அமைச்சர் டில்லியில் முகாம் புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு
-
அதிக மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க செயின்; முத்தியால்பேட்டை காங்., பொறுப்பாளர் அறிவிப்பு