மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடு அரியபெருமானுாரில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : அரியபெருமானுாரில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கலெக்டர் ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 21 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 388 உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தையல், மரச்செக்கு எண்ணெய், துணிக்கடை உட்பட பல்வேறு தொழில்களை மேற்கொண்டு, வருமானம் பெறுகின்றனர். சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் சுயதொழில் கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி தாலுகாவில் மொத்தம் 746 சுய உதவிக் குழுக்களும் அதில் 10 ஆயிரத்து 556 மகளிர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். மகளிர் சுயதொழில் செய்து முன்னேறும் வகையில் பல்வேறு சுயதொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அரியபெருமானுாரில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், பதிவேடுகள், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விடுபட்ட மகளிரை சுய உதவிக் குழுக்களில் சேர்த்தல், வங்கிக் கடன் இணைப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகள் குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.
மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அனைத்து மகளிரும் பெற்று, சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்' என்றார்.
மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
பயணிகள் தள்ளிய அரசு பஸ் ஓட்டை உடைசலுக்கு தீர்வு எப்போது
-
கோட்டையூரில் சித்திரை தேரோட்டம்
-
மருத்துவக்கல்லுாரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?
-
குமரி - ஹவுரா, தாம்பரம் - நாகர்கோவில் ரயில்களை தினமும் இயக்க வலியுறுத்தல்
-
பைக் எதிரே வந்ததால் கண்மாய்க்குள் பாய்ந்த பஸ்
-
ஆந்திரா எம்.எல்.ஏ.,க்கள் அறுபடை வீடு பயணம்