பள்ளப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
அரவக்குறிச்சி: பத்து நாட்களுக்கு மேலாகியும், குடிநீர் வராததால் நகராட்சி நிர்-வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பள்ளப்பட்டி நகராட்சியில்,
27 வார்டுகள் உள்ளன. சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலத்தை தவிர, வாரம் ஒரு முறை குடிநீர் திறந்து விடப்பட்டு வந்தது.
கோடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை, 10 முதல் 15 நாட்-களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகி-றது.
10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் பள்ளப்பட்டி நகராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறைந்த அளவே உள்ளதால், அனைத்து பகுதிகளுக்கும் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பல பகுதிகளில், 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.