காப்பர் ஒயர் திருட்டு இரண்டு பேர் கைது

கரூர்: கரூர் அருகே, காப்பர் ஒயர் திருடியதாக இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 50; டெக்ஸ் ஊழியர்.

இந்நிலையில், ராயனுாரில் டெக்ஸ் நிறுவ-னத்துக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த, காப்பர் ஒயரை மர்ம நபர்கள் கடந்த, 10ல் திருடியுள்ளனர். இதன் மதிப்பு, 7,000 ரூபாய். இதுகுறித்து, கணேசன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, காப்பர் ஒயரை திருடியதாக ராயனுாரை சேர்ந்த விக்னேஷ், 25, தனுஷ், 20, ஆகிய இரண்டு பேரை, தான்தோன்-றிமலை போலீசார் கைது செய்தனர்.

Advertisement