பா.ம.க., சித்திரை மாநாடு போலீசார் தீவிர கண்காணிப்பு
ராசிபுரம்: பா.ம.க., இளைஞரணி சார்பில், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், நேற்று சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இதனால், பா.ம.க.,வினர் அதிக வாகனங்களில், நேற்று முன்தினம் இருந்து மாநாட்டிற்கு செல்ல தொடங்கினர். ராசிபுரம் பகுதியிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பா.ம.க., வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வரவேண்டும் என்பதற்காக, ராசிபுரத்தில் இருந்து மாவட்ட எல்லையான திம்மநாயக்கன்பட்டி வரை ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சேந்தமங்கலம் பிரிவு ரோடு, காக்காவேரி, வெங்காயபாளையம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, தண்ணீர்பந்தல்காடு, மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா, ஆயில்பட்டி, மங்களபுரம் என, அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் போலீசார் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முக்கியமாக, திம்மநாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட எல்லை செக்போஸ்டில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும்
-
9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
-
ராணுவ கிடங்கில் குண்டு வெடிப்பு; இந்தோனேஷியாவில் 13 பேர் பலி
-
எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
-
ஆயில் கிடங்கில் தீ: ரூ.30 கோடி எண்ணெய் நாசம்