'நெட்' தேர்வு அவகாசம் நீட்டிப்பு

கல்லுாரி ஆசிரியர் பணி தகுதிக்காக, யு.ஜி.சி., நடத்தும் தேசிய தகுதி தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 7ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு, 11:59 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாளைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றலாம், நாளை மறுநாள் திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'https://ugcnet.nta.ac.in/' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement