காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைப் பகுதி அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நேற்று (மே 14) பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது.
எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்கள், வெடிக்காத குண்டுகள் அல்லது வெடிபொருட்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இந்திய ராணுவம் அல்லது ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
-
மிகக்குறைந்த செலவில் உருவான பார்கவஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி
-
நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது
-
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; குழந்தைகள் உட்பட 65 பேர் பலி