சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு முடக்கம் நீக்கம்

புதுடில்லி: இந்தியா குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை காலை முடக்கப்பட்ட நிலையில், மாலை அது நீக்கப்பட்டது.


குளோபல் டைம்ஸ் என்பது சீன அரசு பத்திரிகை. குளோபல் டைம்ஸ் நாளிதழ், டிஜிட்டலில் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்கள், போலி செய்திகள் வெளியாகுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஆதாரமற்ற தகவல்களை குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.



அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சின்ஹுவா நியூஸ், டி.ஆர்.டி., வேர்ல்ட் ( TRT World) ஆகிய ஊடகங்களும் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அதன் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.

இந்நிலையில் மாலையில் குளோபல் டைம்ஸ் , டிஆர்டி வோர்ல்ட் மீதான தடை நீக்கப்பட்டது.

Advertisement