பீஹாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!

13

பாட்னா: பீஹாரில் அம்பேத்கர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற, காங்கிரஸ் எம்.பி ராகுல் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ராகுல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினோம். உங்களுடைய அழுத்தத்தினால், ஜாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்" என்று பேசியுள்ளார்.



இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பீஹார் அரசு என்னைத் தடுக்கிறது. முதல்வர் நிதீஷ் குமார் ஏன் பயப்படுகிறீர்கள்? மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா? இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement